தேவையற்ற விடுப்பு எடுப்பதை தவிர்த்து விட்டு, விடுமுறை நாட்களிலும் பணியாற்றுங்கள் என அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையின் கூட்டம் நேற்று
மாலை பிரதமர் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு மொத்தமுள்ள 66 அமைச்சர்களில் 3 பேர் தவிர மற்றவர்கள் ஆஜராகினர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு தவிர்க்க முடியாத பணி இருந்ததால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் கீதே, பா.ஜ.,வுடனான சிவசேனாவின் உறவு சரியில்லாத காரணத்தால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் நெருங்கி வருவதால், மத்திய அமைச்சர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேவையற்ற விடுப்புகளை தவிர்த்து விட்டு, கூடுமானவரை விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டும், பார்லிமென்ட்டில் தற்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் புதிதாக வரவுள்ள மசோதாக்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
இந்த கூட்டத்திற்குப்பின் பேசிய மூத்த அமைச்சர்களில் ஒருவர், பிரதமர் கடுமையாக உழைக்கக்கூடியவர்களை மட்டுமே தன்னுடன் வைத்திருக்க விரும்புகிறார். மேலும், பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறார். அதன்படி கேபினட் அமைச்சர்கள் தங்களது பணிகளில் குறிப்பிட்ட சிலவற்றை இணையமைச்சர்களுக்கு பிரித்து கொடுத்து அரசு பணிகளை ஜூனியர்களும் புரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மூத்த அமைச்சர்கள் தங்களை மதிப்பதில்லை. தங்களுக்கு எந்த பணியும் அளிப்பதில்லை என குறைபட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.