லோக்சபா தேர்தலில், கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட வீடியோ கிராஃபர்களுக்கு வழங்கிய தொகையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள், 300 ரூபாய் கமிஷன் எடுத்துக் கொண்டதால், இரவு, பகலாக
வேலை பார்த்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடைபெறும் போது, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தனித்தனி பிரிவாக பிரிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவர்களுக்கு, போக்குவரத்து செலவு முதல், டீ, சாப்பாடு ஆகிய அனைத்துக்கும், ஊக்கத்தொகை வழங்கப்படும்.கடந்த ஏப்., 25ம் தேதி, லோக்சபா தேர்தல் நடந்தது. சேலம் லோக்சபா தொகுதியில், சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சங்ககிரி, இடைப்பாடி, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றது. லோக்சாப தேர்தலில், துப்புரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை, பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இவர்களை தவிர, மாவட்டம் முழுவதும், தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்வது முதல், ஓட்டு எண்ணிக்கை வரையிலான நடவடிக்கைகளை கண்காணிக்க, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டது.ஒவ்வொரு குழுவிலும், மூன்று நபர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள், அன்றாட நிகழ்வுகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்தனர். எட்டு மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு, 1,150 ரூபாய், 24 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு, 2,450 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
மொத்தம், 45 நாட்கள், 100க்கும் மேற்பட்ட வீடியோ கிராஃபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். லோக்சபா தேர்தல் முடிந்து, பல மாதங்கள் ஆகியும், அவர்களுக்கு தொகை வழங்கப்படவில்லை. ஏற்கனவே, கடும் அதிருப்தியில் இருந்தனர். சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம், மாவட்டம் வாரியாக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரவு, பகல் பார்க்காமல் கண் விழித்து, அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்த வீடியோகிராஃபர்கள் புலம்பும்படி, சேலம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.ஒவ்வொரு வீடியோ கிராஃபர்களுக்கும் வழங்கும் தொகையில், 300 ரூபாய் எடுத்துக் கொண்டுதான் அதிகாரிகள் வழங்குகின்றனர். 100 புகைப்படகாரர்களிடம் எடுக்கும் தொகையில், நாள் ஒன்றுக்கு மட்டும், 30 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் அவர்கள் பணியாற்றிய, 45 நாட்களுக்கும் சேர்த்து, லட்சக்கணக்கில் சுவாகா செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகளின், இந்த நடவடிக்கையால், எதிர்காலத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் எண்ணத்தையே, பல வீடியோ கிராஃபர்கள் விட்டுள்ளனர்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் சுரேஷ் கூறியதாவது: நாங்கள் ஏஜன்சி மூலமாகத்தான் வீடியோக கிராஃபர்களை பணி அமர்த்தினோம். ஏஜன்ஸிகள், அவர்களிடம் எவ்வளவு தொகை பேசினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. பணத்தை, நாங்கள் ஏஜன்சியிடம் வழங்கிவிட்டோம். அதில் பணம் எடுப்பது குறித்து எங்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட ஏஜன்சியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.