சிறந்த கணித மேதைகளை உருவாக்கும் இந்தியா!!

சிறந்த கணித மேதைகள் எல்லாம், எப்போதும், இந்தியாவிலிருந்தே உருவாகின்றனர். அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில், இந்தியாவின் திறமை பாராட்டத்தக்கது' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நேதன்யாகு கூறினார்.

இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, டெல்அவிவ் நகரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் நேதன்யாகு கூறியதாவது:என் மாமா ஒரு கணித நிபுணர். சிறந்த கணித மேதைகள் எல்லாம், இந்தியாவில் இருந்தே உருவாகின்றனர் என, அவர், என்னிடம் அடிக்கடி கூறுவார். அறிவியல் மற்றும் புதிய கண்டு பிடிப்புகளிலும், இந்தியாவின் திறமை பாராட்டத்தக்கது.அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்திலும், சிலிகான் வேலியில் உள்ள கல்லுாரியிலும் நான் படித்தேன். அங்கு படித்தவர்களில், பெரும்பாலானவர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் இந்தியர்களே. அதனால், எனக்கு இந்திய நண்பர்கள் நிறைய பேர் உண்டு.இவ்வாறு, நேதன்யாகு கூறினார்.

இதற்குப் பதில் அளித்த ராஜ்நாத் சிங் கூறியதாவது:இந்தியா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானி கள் பல துறைகளில் புரிந்து உள்ள சாதனைகள் பாராட்டத்தக்கது. இருப்பினும், அறிவியல் துறையில், இந்தியா - இஸ்ரேல் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...