சென்னையில் இன்று அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் கூட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சோலை எம்.ராஜா நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது: கோடம்பாக்கத்தில் உடற்கல்வி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
ஊதிய உயர்வு: பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்ததற்காக தமிழ்நாடு அரசுக்கு எங்கள் கூட்டமைப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...