அறிவியல் துறையில் இந்தியா வேகமான முன்னேற்றம்

அறிவியல் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறினார்.

இந்திய பல் மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பின் 27-ஆவது ஆண்டு
தேசிய கருத்தரங்கம் சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசியது:

அறிவியல், தொழில்நுட்பத்தை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்தி வருவதன் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதுடன், தகவல் தொடர்பு சாதனப் பயன்பாட்டில் முதல் 10 இடத்துக்குள் முன்னேறியுள்ளது. மேலும், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது. அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகளுடன், சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணையையும் இந்தியா வைத்துள்ளது.

அதேபோல, வரும் 2020-ஆம் ஆண்டில் நம் நாட்டின் உணவு உற்பத்தி 400 மில்லியன் டன்னாகவும், அணு மின்சார உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கப் போகிறது. அதே நேரத்தில், மருத்துவத் துறையிலும் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுவருகிறோம்.

நமது எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஸ்டெம் செல் மூலம் இதய பாதிப்பை சரி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெம் செல் தொடர்பான ஆராய்ச்சி அதிகரித்துள்ளது. அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நம் நாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னேடுப்பதன் மூலம் மேலும் பல துறைகளில் சாதிக்க முடியும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...