இந்தி மொழியை விரிவாக்குவதும், பிரபலப்படுத்துவதும் தற்போது தேவை -ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும், இந்தி மொழிப் படிப்புகளுக்கான மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்
.

இந்தி மொழியை இன்னும் பிரபலமாக்கி வளர்க்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆக்ராவிலுள்ள மத்திய இந்தி கல்வி நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், இதுதொடர்பாக கூறியதாவது: இந்தி மொழியை விரிவாக்குவதும், பிரபலப்படுத்துவதும் தற்போது தேவையாக இருக்கிறது. எனவேதான், புதிய மையங்களை அமைக்க வேண்டியுள்ளது.

இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள், உரிய கவுரவத்தைப் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...