இரத்து செய்ய வேண்டும்

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் வங்கிகளின் தானியங்கி பணப்பரிமாற்ற கருவியை (ஏ.டி.எம்) பயன்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு போதிய
வசதிகளை செய்து தராமல், இத்தகைய கட்டுப்பாடுகளையும், கட்டணங்களையும் நடைமுறைப்படுத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஏ.டி.எம். மையங்களை நிர்வகிக்க அதிக செலவு ஆவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. உண்மையில் ஏ.டி.எம். மையங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டன என்பதைவிட வங்கிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டவை என்பது தான் பொருத்தமானதாக இருக்கும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப புதிய கிளைகளை தொடங்குவதைத் தவிர்க்கவே ஏ.டி.எம். மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு கிளையை திறந்து, நடத்துவதற்கான செலவில் 10 ஏ.டி.எம். மையங்களைத் திறந்து நடத்த முடியும். இதனால் வங்கிகளுக்கு பெருமளவு பணம் மிச்சமாகிறது.

அதுமட்டுமின்றி, ஏ.டி.எம். சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் கொண்டே ஏ.டி.எம். மையங்களின் செலவில் பெரும்பகுதியை ஈடு செய்ய முடியும்.

நடவடிக்கை
அவ்வாறு இருக்கும் போது, ஏ.டி.எம். சேவையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறையல்ல. இது வாடிக்கையாளருக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், வங்கிகளுக்கு நீண்டகால அடிப்படையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஏ.டி.எம். மையங்களில் அனுமதிக்கப்பட்ட தடவைகளுக்கு மேல் சேவை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிகளுக்கே நேரடியாக வந்து சேவை பெறத்தொடங்கினால், அதை வங்கிகளால் சமாளிக்க முடியாது.

அப்போது கூடுதலாக பல கிளைகளை தொடங்க வேண்டியிருக்கும். அதற்காக ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது ஏ.டி.எம். மையங்களுக்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, ஏ.டி.எம். சேவையை பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை நீக்கி, ஏ.டி.எம். மையங்களில் எந்தவித தடையும் இல்லாமல், அனைத்து சேவைகளையும் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...