இன்று நீடித்தது ,நாளை குறையும் !!!


தமிழ்நாட்டில் இன்றும் மழை நீடிக்கும், நாளை முதல் படிப்படியாக குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த பருவமழைக்காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை தமிழகத்திற்கு கிடைக்கும். இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய குறுகிய காலத்திலேயே 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது. எனவே இந்த வருடம் சராசரி அளவை தாண்டி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கருதுகின்றனர்.

சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

வங்கக்கடலில் இலங்கை அருகே சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அப்படியே உள்ளது. அது இப்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் இருக்கிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.

இன்றும் மழை நீடிக்கும்

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாளை (புதன்கிழமை) முதல் தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும். அடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புதிதாக உருவானால் தான் மழை பெய்யும்.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னையில் மழை

சென்னையில் நேற்று காலை பல இடங்களில் மழை விட்டு, விட்டு பெய்தது. பகல் முழுவதும் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.

இந்த நிலையில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் தாக்கம் எதுவும் தமிழ்நாட்டுக்கு இருக்காது.

கொடைக்கானலில்மீண்டும் மழை

கொடைக்கானலில் ஒரு வாரத்துக்கு பின் நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் குருசடி என்ற இடத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட டம்டம் பாறை பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் காலையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 2 நாட்களுக்கு பிறகு ஓரளவு மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் நல்லமழை பெய்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...