தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !!!

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தில் வியாழக்கிழமை (நவமபர் 20) முதல் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

நிலநடுக்கோடு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டியுள்ள தென் வங்கக் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் நாள்களில் தெற்கு கடலோரம், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெறும் வாய்ப்புள்ளது. லட்சத்தீவு அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அதிகபட்சமாக 100 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் மடுக்கூர், ராமேஸ்வரத்தில் தலா 70 மி.மீ, ராமநாதபுரம், கமுதியில் தலா 60 மி.மீ, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, ஆலங்குடி, சிதம்பரம், வேதாரண்யம், குடவாசல், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தலா 50 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.

முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் அனேக இடங்களில் கன மழை பெய்யும்.

அதேபோல, உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...