இன்று உலக எய்ட்ஸ் தினம் ஹெச்.ஐ.வி., பாதிப்பில் நாமக்கல்லுக்கு 11வது இடம்

உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு, ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் இன்று (டிச., 1). இந்தியாவில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா,
மிசோராம், நாகாலந்து உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி தொழிலுக்கு மையமாக இருக்கும் நாமக்கல் மாவட்டம், கடந்த 2005ல் தமிழகத்திலேயே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பல்வேறு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால், நாமக்கல் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி., பாதிப்பு குறைந்து, மாநில அளவில் இன்று, 11வது இடத்தை பெற்றுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மைய தலைமை டாக்டர் ரமேஷ்குமார் கூறியதாவது:நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள வி.சி.டி.சி., மற்றும் ஏ.ஆர்.டி., மையத்துக்கு தினமும் சிகிச்சை, கவுன்சிலிங் பெற, 250 பேர் வருகின்றனர். அதில், 20 சதவீதம் பேருக்கு நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்படுகிறது. எய்ட்ஸ் நோய் உறுதி செய்யப்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் மருந்து வழங்குவதற்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில், 2005ல் ஏ.ஆர்.டி., சிகிச்சை மையம் (கூட்டு மருந்து) துவங்கப்பட்டது.இம்மையத்தில், 14 ஆயிரத்து, 739 ஆண்கள், பெண்கள், 475 குழந்தைகள், என, மொத்தம் 15 ஆயிரத்து, 214 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், குழந்தைகள் உட்பட 4,801 பேர் தொடர்ந்து, ஏ.ஆர்.டி., மருந்து மற்றும் சத்துமாவு உட்கொள்கின்றனர். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், 200க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் ஏ.ஆர்.டி., மருந்து வழங்கப்படுகிறது.நாமக்கல் ஏ.ஆர்.டி., மையத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எய்ட்ஸ் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஏ.ஆர்.டி., மையம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்து, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தான் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



நாமக்கல் ஜி.ஹெச்.,ல் தரமான சிகிச்சை அளிப்பு

* இந்தியாவில், மும்பை, சென்னை தாம்பரம் மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் தான், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இங்கு ஏ.ஆர்.டி., மருந்து, ஹெச்.ஐ.வி., பாதித்தோரை தாக்கும் சந்தர்ப்பவாத நோய்களுக்கான சிகிச்சை, உடலுறவால் ஏற்படும் நோய்க்கான சிகிச்சை, தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஹெச்.ஐ.வி., பரிசோதனை செய்யப்படுகிறது.

* வெள்ளை அணுக்கள் பரிசோதனை மிஷின் ஏ.ஆர்.டி., சென்டரில் அமைக்கப்பட்டு, வாரம் முழுவதும் நோயாளிக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* ஏர்.ஆர்.டி., லிங் சென்டராக கபிலர்மலை, கொல்லிமலை, ராசிபுரம், எருமப்பட்டி, மோகனூர், பரமத்தி, சேந்தமங்கலம், மல்லசமுத்திரம் ஆகிய, எட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரை பெற்றுக்கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...