கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணி காலியிடத்திற்கு நவம்பர் 8ல் உத்தேச பதிவு மூப்பு பட்டியல்

கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணி காலியிடத்திற்கு நாளை உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணி காலியிடங்களுக்கு
தகுதியான பதிவுதாரர்களை பரிந்துரை செய்ய, மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியிடப்படுகிறது. இந்த பணிக்கு கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்பம் பட்டப்படிப்பு, பி.சி.ஏ., தகுதியுடன் ஆசிரியர் பட்டப் படிப்பு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு இல்லை. தகுதியும் பதிவுமூப்பும் உள்ளவர்கள் உத்தேச பரிந்துரை பட்டியலில் தங்களது பதிவு விவரங்களை நாளை (டிச.,8) தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர் தகுதியில் பதிவு செய்து உள்ள அனைவரின் இதில் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் உரிய சான்றுகளுடன் அலுவலகத்தில் நேரில் சென்று சரிசெய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...