9ம் வகுப்பு மாணவர்கள் முழுகால் சட்டை தான் அணியவேண்டும்

பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின்
கடிதத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

அனைத்து விதமான பள்ளிகளிலும் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முழுக்கால் சட்டை (பேண்ட்) அணிய வேண்டும்.

மேலும், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது உறுதிச் சான்றிதழையும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...