பள்ளியில் நீதி போதனைகள் வேண்டும் !!!

பள்ளி–கல்லூரி பாடத்திட்டத்தில் நீதி போதனையை கட்டாயமாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பள்ளி வகுப்பறையில் கொலை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8–ம்
வகுப்பு பயின்று வந்த மாணவன், அதே பள்ளியின் முன்னாள் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். கல்வியும், கலையும் செழிக்க வேண்டிய வகுப்பறைகளில் வன்முறை தலைவிரித்தாட தொடங்கி இருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்பார்கள். ஆனால், பேனா பிடிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் கத்தியும், அரிவாளும் தூக்க தொடங்கி இருக்கிறார்கள் என்றால், அதற்கான பின்னணி காரணங்கள் குறித்து சமூக நலனிலும், எதிர்காலத் தலைமுறையினரின் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் ஆராய வேண்டியது அவசர தேவையாகும்.

அவல கலாசாரம்
கல்வி எப்போது வணிக மயமானதோ அப்போதே இந்த கலாசாரமும் மறைந்து, ஆசிரியர்களை மாணவர்கள் எதிரிகளாக பார்க்கும் அவல கலாசாரம் தொடங்கிவிட்டது.

கடந்த காலங்களில் வாரத்துக்கு 40 பாடவேளைகள் இருந்தால், அவற்றில் நீதிபோதனைக்கும், விளையாட்டுக்கும் தலா 2 பாடவேளைகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

கல்வி வணிகமயமாகி விட்ட சூழலில் நீதி போதனை அடியோடு ஒழிக்கப்பட்டு, விளையாட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு மனப்பாட படிப்புக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது பாடவேளைகள் அனைத்தும் மனப்பாட பாடத்துக்கு ஒதுக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

நீதி போதனை
தெருவுக்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகள் மாணவர்களின் சீரழிவு வேகத்தை மேலும் அதிகரிக்கின்றன. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பது ஒருபுறமிருக்க, கல்லூரி படிப்பின் ஆழத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதும், இன்னொருபுறம் தொடர்கதையாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும் மோசமாகிவிடும். இந்த நெருக்கடியில் இருந்து மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தில் நீதி போதனையையும், விளையாட்டையும் கட்டாயப்பாடமாக்க வேண்டும். அத்துடன் நேர்மை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் சுமையற்ற, சுகமான கல்வி முறையால் மட்டுமே இது சாத்தியமாகும். இதை உணர்ந்து, சிறந்த கல்வி முறையை வழங்குவதன் மூலம் மாணவர்களை நாட்டின் எதிர்கால தூண்களாக உருவாக்க அரசு, ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...