பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கு; ஜாமின் வழங்க அரசுக்கு நோட்டீஸ்

கோடம்பாக்கத்தில் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள, அருளானந்தத்திற்கு ஜாமின் வழங்க, அரசு பதிலளிக்க, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை, கோடம்பாக்கத்தில், கடந்த, 20ம் தேதி, பள்ளி ஆசிரியர் பாஸ்கர்
தாக்கப்பட்டார். இந்த வழக்கில், முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுஇருக்கும், அருளானந்தம் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. 'வழக்கில், போலீஸ் தரப்பு விசாரணை இன்னும் முடியவில்லை. இதனால், அருளானந்தத்திற்கு, ஜாமின் வழங்க கூடாது' என, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகன் வாதிட்டார்.'மனுதாரரின், ஜாமின் வழங்குவது குறித்து, வரும் 15ம் தேதிக்குள், அரசு பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...