விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க வேண்டும் !

பள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலை மையில் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்திருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை நாள்களில் நடைபெறவுள்ள சிறப்புத்தேர்வை,பள்ளி வேலைநாள்களில் நடைமுறைப்படுத்த வேண்டும், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட பயிற்சியை விரைவில் வழங்கவேண் டும், அரையாண்டுத்தேர்வு முடிவினை ஆய்வுசெய்யும்போது அனைத்து ஆசிரியர்களை யும் வரவழைத்து ஆய்வுசெய்யும் முறையைத்தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனு அளிப்பதற்காக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலச்செயலர் சேது.செல்வம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழக மாநிலப்பொருளாளர் இளங்கோ, தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச்செயலர் கணேசன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் எட்வின், ஆங்கில மொழி ஆசிரியர் கழக மாவட்டச்செயலர் லூயிஸ், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் பழனியப்பன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...