விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் மற்றும் இரவு நேர காவலர் இல்லை. பாதுகாப்பு இல்லாததால் திருட்டு, சமூக விரோத செயல்கள் அங்கே நடக்கின்றன. இப்பிரச்னையில் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவைகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இரவு நேர காவலரும் கிடையாது. இப் பள்ளிகளில் வேலை நேரத்திலேயே பன்றி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாதாரணமாக நடமாடுகின்றன.
அங்கு வளர்க்கப்படும் செடிகளை கால்நடைகள் மேய்ந்து விடுகின்றன. சில பள்ளிகளில் பெயருக்கு என முள் வேலி அமைத்துள்ளனர். பாதுகாப்பு என நினைத்து இதனை அமைப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், இப்பள்ளியை இருப்பிடமாகப் பயன்படுத்துகின்றன.
மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைகின்றனர். நரிக்குடி அருகே வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி, கணையமறித்தான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் சுற்றும் சுவர், காவலர் இல்லாததால் கம்ப்யூட்டர், புரொஜக்டர், டிவி, லேப்டாப் உள்ளிட்டவைகள் திருடு போயின. நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அதன் வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் செயல்படுகின்றது. இவற்றில் உள்ள கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வக வேதிப்பொருள்கள் உள்ளிட்டவற்றிக்கு பாதுகாப்பு இல்லை. சமீபத்தில் இப்பள்ளியில் மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., போன்றவற்றை திருடி விட்டனர்.
தற்போது ஒருபுறம் மட்டும் சுற்றுச் சுவர் அமைத்துள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு கேள்விக்குறியே. உலக்குடி அரசுமேல் நிலைப்பள்ளி ஊரிலிருந்து 2 கி.மீ., தொலைவில் தனியாக காட்டுப் பகுதியில் உள்ளது. இங்கும் சுற்றுச் சுவர் இல்லை. வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி ஊருக்கு வெளியே தனியாக உள்ளது.
இதே போல மாவட்டத்தின் பல பகுதி அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற நிலைதான் உள்ளது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. இங்கெங்லாம் சுற்றுச்சுவர் அமைத்து, இரவு காவலரை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கர், மானூர்: நரிக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை. கருவேல மரங்கள், முட்புதர்கள் நிறைந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பள்ளிக்குள் வந்து விடுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர். காவலர் இல்லாததால் திருட்டு நடக்கவும் வாய்ப்புள்ளது.
கார்த்தி, கொட்டக்காச்சியேந்தல்: சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளில் காவலராவது நியமிக்க வேண்டும். ஊருக்கு வெளியே உள்ள பெரும்பாலான பள்ளிகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. மதுகுடிப்பது, சூதாட்டம் உள்ளிட்ட செயல்கள் அங்கே அரங்கேறுகின்றன. போலீஸ் மூலம் இதை தடுக்க வேண்டும்.
மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசின் அனுமதி பெற்று சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளிகளில் அதனைக் கட்டி, காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.