பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடும் முன்னுதாரண மாணவர்கள்!

களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிறந்த நாளில் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளுக்கு கோவில்களுக்கு சென்று, கேக் வெட்டி நண்பர்களுடனும்,
உறவினர்களுடனும் கொண்டாடுவது வழக்கம். சிலர் அன்னதானம் வழங்குவர். உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பிறந்த நாளில் ஒரு மரக் கன்று நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

பள்ளியை முடித்து சென்றாலும் பள்ளியில் நடப்பட்ட மரம் வளர்ந்து தங்களது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. களமருதூர் பள்ளி மாணவர்களின் இந்த பிறந்த நாள் மரக் கன்று நடுவது, மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...