இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்திலும் குறைந்தளவு மழைகூட பதிவாகவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்து வரும் நான்கு நாள்களில், மழை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு..: அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து, மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...