''வரும் கல்வியாண்டில் நாகப்பட்டினத்தில் மீன்வள பொறியியல் கல்லூரி துவங்கப்படும்,'' என மீன்வள பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார்.
மதுரை விவசாயக் கல்லூரியில் வேளாண் பல்கலை விரிவாக்க சங்கம் சார்பில் நவீன வேளாண் விரிவாக்க உத்திகள் குறித்த தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது. கல்லூரி டீன் சின்னுசாமி, வசந்தகுமார், சின்னதுரை, பிலிப், முருகன் பங்கேற்றனர். பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது: விவசாயக் கல்லூரிகளில் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆராய்ச்சியில் தேவையான அளவு சாதனை படைத்தோமோ என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழகத்தில் 81 லட்சத்து 26 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். உணவு உற்பத்தியில் 92 சதவீதம் சிறு, குறு விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. ஆனால் அவர்களது வாழ்க்கைத்தரம் இன்னும் மாறவில்லை. அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் வேளாண் உத்திகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கண்மூடித்தனமாக திட்டமிடல்களும், பரிந்துரைகளும் சிறு, குறு விவசாயிகளுக்கு கைகொடுக்காது என்றார். துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் பேசியதாவது: வரும் கல்வியாண்டில் மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் துவங்கப்பட உள்ளது. இறால்கள் வளர்ப்பில் ஏழுவித நோய்கள் இருப்பதை கண்டறிந்து நோய் இல்லாமல் மீன்குஞ்சுகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நீர்வாழ் உயிரினங்களுக்கான மேற்பார்வை திட்டம் உள்ளது. இறால் நோய் தாக்குதல் கண்டறிவதற்காக சென்னை, நாகை, தூத்துக்குடியில் பரிசோதனை நிலையம் உள்ளது. திருவாரூர், நாகப்பட்டினத்தில் 'பிளாக் டைகர்' வகை இறால்கள் வளர்க்கப்படுகின்றன. குறைந்தளவு உப்புத்தன்மையுள்ள நீரில் வளரும் 'வனாமி' ரக இறால்கள் 120 நாட்களில் அறுவடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்த காலத்தில் கூடுதல் எடையுடன் அறுவடை செய்யும் வகையில் மரபணு மாற்றப்பட்ட திலேப்பியா மீன்கள் பண்ணை குட்டைகளில் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.