கணிதமேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவை பள்ளிகளில் கொண்டாட அரசு முடிவு

கணிதமேதை ராமானுஜத்தின் நுாற்றாண்டு விழா மற்றும் வானியல் அறிஞர் பாஸ்கராச்சார்யா -II வின் பிறந்தநாள் விழாவை, பள்ளிகளில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


வரும் 16ம் தேதி முதல், டிச., 22ம் தேதி வரை இவ்விழாவை கொண்டாடுமாறு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில், மாணவர்கள் கணித பாடத்தில் பின்தங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், உளச் சார்பு வளர்ச்சிக்கான எண்ணியல் கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சி - கனிட் என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பள்ளிகளில் கணிதம் குறித்து, கணித வல்லுனர்கள், முன்னணி அறிவியலாளர்கள் உள்ளிட்டோரின் சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும், ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கலந்தாய்வு, கட்டுரைப் போட்டி, வினா, விடை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...