மாற்றுத்திறன் குழந்தைகளை மூலையில் முடக்காமல், அவர்களோடு கைகோர்த்து, பயிற்சியளித்தால், பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும்

மாற்றுத்திறனுடையவர்களை மூலையில் முடக்காமல், அவர்களோடு கைகோர்த்து, அவர்களின் திறன்களை எளிதாக மேம்படுத்தலாம் என மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடந்த விழாவில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, போடிபட்டி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பகல் நேர பாதுகாப்பு மையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதற்கட்டமாக, பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், தங்களிடம் குறையேதுமில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், பழங்களின் நன்மைகள் என்ற தலைப்பில், மாறுவேடமிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், சுதந்திரத்திற்காக போராடிய தேசதலைவர்களின் வேடமிட்ட குழந்தைகள், பார்வையாளர்கள் முன்பு அசத்தினர். பல்வேறு குறைபாடுகளை தங்களிடம் கொண்டிருந்தாலும், முயற்சி என்ற ஒரே ஆதாரத்துடன் அக்குழந்தைகள் மேற்கொண்ட ஒவ்வொரு செயல்பாடுகளும், அங்கிருந்த பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தியது.

தொடர்ந்து, ’மாற்றுத்திறனாளிகள் குறித்து நடுநிலைப்பள்ளி மாணவிகள் பேசுகையில், ‘பல்வேறு மாற்றுத்திறனுடையவர்கள், சர்வதேச அளவில் மனிதர்களுக்கு தேவையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளை ஒதுக்காமல், அவர்களிடமுள்ள திறனை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளை மூலையில் முடக்காமல், அவர்களோடு கைகோர்த்து, பயிற்சியளித்தால், பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும்’, இவ்வாறு நடுநிலைப்பள்ளி மாணவிகள் பேசினர்.

சாதனைகளை நடத்திய மாற்றுத்திறனுடையவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மாற்றுத்திறன் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்காமல், அருகில் செயல்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பகல் நேர பாதுகாப்பு மையங்களில், சேர்க்க வேண்டும். அங்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

போடிபட்டி பாதுகாப்பு மையத்தில், பயிற்சி பெற்ற பல குழந்தைகள், பிற குழந்தைகளுக்கு இணையாக மேற்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோரும், அருகிலுள்ளோரும் அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்’, என அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய சிறப்பாசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...