ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றின் செல்லத்தக்க காலம், இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், டிச., 2015, வரை நீட்டிக்கும் வகையில், அவற்றில், தற்போது, உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல் நேற்று வரை, 1.43 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, உள்தாள் ஒட்டும் பணி நிறைவு அடைந்துள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்கள், அவர்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களுக்கு, கடைக்கு சென்று, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி கொள்ளலாம். அந்த நாட்களில் செல்ல முடியாதவர்கள், சனிக்கிழமைகளில், உள்தாள் ஒட்டி கொள்ளலாம். உள்தாள் ஒட்ட, காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.