பதவி உயர்வு மூலமே தலைமை ஆசிரியர் பதவி நிரப்ப வேண்டும் !

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை வகித்தார்.


              மாநில செயலாளர் ஆசைத்தம்பி, பொது செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வின் மூலமே நிரப்ப வேண்டும்.மேலும், 2004-06 தொகுப்பூதிய காலத்தை பணி காலமாக கருதி, தேர்வுநிலை பணப்பலன்களை வழங்க வேண்டும். மேல் படிப்புக்கு முன், அனுமதி அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே வழங்க அனுமதி அளிக்க வேண்டும். வகுப்பறையில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி வேண்டுவதை முதன்மை கல்வி அலுவலர் நிறுத்தி கொள்ள வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சில் நடத்த வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்.எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு நேரத்தை காலை, 10 மணிக்கு துவங்க வேண்டும். விடைத்தாள் திருத்த நாள் ஒன்றுக்கு, 15 ரூபாய் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...