கட்டாய கல்வி உரிமை சட்டத்தை RTE-2009 ஐ பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வேலை நீக்கம் ! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு !!!

திரிபுரா உயர்நீதிமன்றம் 10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது, மேலும் அரசுக்கு 31.12.2014-க்குள் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.


உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 09.01.2015 விசாரனைக்கு எடுத்துக்கொள்கிறது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரைக்கும் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பார்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

காரணம்:

ஆசிரியர்கள் பணிநியமனம் செய்வதில் புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்தவேண்டும் என்று 2009-ல் உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி மத்திய அரசு மாநில அரசுக்கு புதிய கல்வி கொள்கையை உடனடியாக அமல் படுத்த அறிவுறுத்தியிருந்தது. ஆனால் திரிபுரா மாநில அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்தப்படாமல் இருந்தது.

மற்றொருபுறம்SG, BT, PGTஆசிரியர்களின் பணிக்கு நேர்காணலுக்கான விண்ணப்பம் 2002, 2003 மற்றும் 2006 வருடங்களில் கொடுக்கப்படிருந்தது. ஆனால் 2010 லிருந்து 2013 இடைப்பட்ட காலத்தில் ஆசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த இடைவெளியில் அரசு விரும்பியிருந்தால்,புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்த்தியிருக்கலாம். ஆனால் மாநில அரசு அந்த கால இடைவெளியில் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. இத்தனை நெருக்கடி இருந்தும் கூட, 2013 கிறிஸ்மஸ் நாளில், அமைச்சரவை உடனடியாக 10323,SG, BT, PGTஆசிரியர்களை பணிநியமனம் செய்ய முடிவு செய்தது.மாநில அரசு இந்த வழக்கில் தோற்றுப்போனால்,10323ஆசிரியர்களின் ஒரு பகுதியினர் அரசினை எதிர்த்து வழக்கு தொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ARTICLE BY,
Mr.A ALEXANDER SOLOMON.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...