ஊதிய உயர்வுஊதிய குழு அமுலுக்கு வந்த 1.1.2006 முதல் (31.12.2005) செயல்படுத்த வேண்டும்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும்,

அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதிய குறை தீர்ப்பு பிரிவின் படி இந்த உத்தரவு 31.12.2014 முதல்அமுலுக்கு வருவதாக கூறப்படுகிறது. 31.12.2014 அன்றும் அதற்கு பின்னரும் ஓய்வு பெறுபவர்கள் மட்டுமே இவ்வாணையினால் பயனடைய இயலும், தற்போதுநடைமுறையிலுள்ள ஊதிய குழு அமுலுக்கு வந்த 1.1.2006 முதல் (31.12.2005) செயல்படுத்த வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...