71 ஆயிரம் மகளிருக்கு ‘யோகா, ஏரோபிக்ஸ்’ பயிற்சி
பதிவு செய்த நாள்: ஜன 29,2015 12:01
எழுத்தின் அளவு:
சிவகங்கை: பாலியல் வன்முறை, வழிப்பறியில் இருந்து தற்காத்துக் கொள்ள 71 ஆயிரம் மகளிருக்கு ’யோகா, ’ஏரோபிக்ஸ்’ பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்காக 30 பேர் கொண்ட மகளிருக்கு பயிற்சி வழங்க தலா ரூ.4,000 வீதம் மாநில அளவில் 26 மாவட்டங்களில் 4,174 ஊராட்சிகளை சார்ந்த 41,740 வறுமை ஒழிப்பு சங்கங்கள், 30,096 ஊராட்சி சார்ந்த மகளிர் கூட்டமைப்பினர் உட்பட 71 ஆயிரத்து 836 மகளிருக்கு பயிற்சி வழங்க, ரூ.4.50 கோடி வரை அரசு ஒதுக்கியுள்ளது.
’யோகா’ ’ஏரோபிக்ஸ்’:
தேர்வு செய்யப்பட்ட கராத்தே, யோகா பயிற்சி மையங்களின் பெண் பயிற்சியாளர்களை கொண்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மகளிர் குழு, வறுமை ஒழிப்பு சங்க மகளிருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 30 மகளிருக்கு 3 நாள் அல்லது 12 மணி நேர பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி மாவட்ட வாரியாக மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக புதுவாழ்வு திட்ட மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்