விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து

விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வீடுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


தமிழகத்தில் 66.50 லட்சம் குழந்தைகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி , ''விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் ''என்றார்.

அதன்படி, இன்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...