இலங்கையில் அதிபர் மாற்றம் !

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா 3,67,358 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம்மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாக 24,47,167ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

ராஜபக்சேவுக்கு ஆதரவாக 21,07,437 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாககண்டி, காலி, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல கம்பகஹா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் தபால் வாக்குப்பதிவில் மைத்திரிபால சிறிசேன பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தளை,மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் தபால் வாக்குப் பதிவுகளில் மகிந்த ராஜபக்சமுன்னிலை பெற்றுள்ளார்.முல்லைதீவில் 78.94 % வீத வாக்குகளும், சாவகச்சேரியில் 77,23% வீதவாக்குகளும், காங்கேசன் துறையில் 55.48% வீத வாக்குகளும், கிளிநொச்சியில்72.11% வீத வாக்குகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீசேனா 53.00 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். ராஜபக்சே 45.64 சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

எனவே மைத்திரி பால ஸ்ரீசேனா அதிபராவது உறுதியாகியுள்ளது. இன்றே அவர் பதவியேற்பார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...