அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. எனவே, கல்லூரிகள் வரும் 2015-16 கல்வியாண்டில் இத் திட்டத்தை அறிமுகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...