நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை அரசு அதிகாரிகள் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என வழியனுப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.பால்வசந்தகுமார் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்த வார இறுதியில் நீதிபதி பால் வசந்தகுமார் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான வழியனுப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், ஜெய்ச்சந்திரன் உள்பட அனைத்து நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்பட பல்வேறு வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவில் நீதிபதி பால் வசந்தகுமார் பேசியது: தமிழக அரசு சட்டக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளில் முழுநேர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணைகளை அரசு அதிகாரிகள் உடனடியாகப் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிமாக வருகின்றன. இது போன்ற வழக்குகளில் நீதிபதி என்கிற முறையில் நான் கண்டிப்பாக இருந்தேன். இதனால், நீதிமன்றத்துக்கு அதிக பணிப் பளு ஏற்படுகிறது. நீதிமன்றம், ஆணைகளைப் பிறப்பிப்பது மட்டுமில்லாமல், அவை பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
அப்போதுதான் சாதாரண மக்களுக்கு நீதித் துறை மேல் நம்பிக்கை வரும். அந்த அணுகுமுறை அவசியம் எனத் தெரிவித்தார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 42-ஆக குறைந்துள்ளது.
9 ஆண்டுகளில் 91,500 வழக்குகளுக்குத் தீர்வு
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பெறுப்பேற்ற 9 ஆண்டுகளில், 91 ஆயிரத்து 500 வழக்குகளை நீதிபதி என்.பால் வசந்தகுமார் முடித்து வைத்துள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பால் வசந்தகுமார், 9 ஆண்டு ஒரு மாதம் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
இதில் ஆண்டுக்கு 5 ஆயிரம் வழக்குகள் என கடந்த 22-ஆம் தேதி வரை மொத்தம் 91 ஆயிரத்து 500 வழக்குகளை முடித்து வைத்துள்ளார். இதில், பிரதான வழக்குள் மட்டும் 45 ஆயிரத்து 770 ஆகும்.