நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் வகுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா கேட்டுக் கொண்டார்.
விஐடி பல்கலைக்கழகத்தில் தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா பேசியதாவது:
பொதுத் துறையுடன் தனியார் துறை இணைந்து செயல்படும் ஒரு நல்ல முன்மாதிரியை உயர்கல்வித் துறையில் உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டில் பல்கலைக்கழகங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண எடுக்கப்படும் முடிவுகளை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தத் தயாராக உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை முழு மூச்சுடன் சீர் செய்தாக வேண்டும். கல்விக் கூடங்களாக மட்டுமின்றி, ஆராய்ச்சிப் பணிகளிலும், மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதிலும் பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் போதிக்கப்பட்ட கல்வி நடைமுறை, தற்போது பின்பற்றப்படும் கல்விமுறை உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
கணக்கீடு, திறன், வேகம் என்ற 3 அடிப்படைகளைக் கொண்டு தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் உயர வேண்டும்.
கல்வியில் தரம் முக்கிய குறிக்கோளாக இருப்பதுடன், அதில் அரசியல் குறுக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மாநில அரசுகளுடன் இணைந்து கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், நம் நாட்டுக்குத் தேவையான வகையில், மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில்