பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் இரவுநேர "பார்" ஆக மாறிவருகிறது. இப்பள்ளி 75 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன் 1200 மாணவர்கள் படித்த நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் தற்போது
500 பேர்தான் படிக்கின்றனர். இரவு காவலாளி இல்லை. 200 மீட்டருக்கு சுற்றுச்சுவர் இல்லை. பெரும்பாலான வகுப்பறைகளுக்கு கதவுகள் இல்லை. இதனால் இரவில் பலர் பள்ளி வளாகத்திற்குள் சென்று பாராக பயன்படுத்துகின்றனர்.
இவ்வளாகத்தில் கழிப்பறை உட்பட சில பகுதியில் உள்ள கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என ஆறு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு சான்று வழங்கினர். இடித்துவிடவும் பரிந்துரை செய்தனர். ஆனால் இன்றும் அவை இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.
மாணவர்கள் கூறுகையில், "திங்களன்று வகுப்பறைக்கு செல்லும்போது மது பாட்டில்கள், டம்ளர்களை அகற்றிவிட்டு சுத்தம் செய்வதுதான் எங்கள் முதல் வேலையாக இருக்கும்" என்றனர்.