விதிகளை மீறிச் செயல்படும் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே
முழுமையாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன.
மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன் ஆகிய பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
மெட்ரிக் பள்ளிகளில் ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பங்களைக் கூட வழங்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் இந்த மாதம் 3-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல்நாள் இரவிலிருந்தே பள்ளிக்கூட வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெற்றோர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் நன்கொடை, கட்டட நிதி என பல்வேறு பெயர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வாங்கப்படுகிறது.
இது தவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.75 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
விதிகளை மீறும் பள்ளிகள் மீதும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், பல இடங்களில் புகார் கொடுத்த பெற்றோர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். எனவே, விதிமுறைகளை ஏற்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.