விழுப்புரம், : தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் ரெக்ஸ்ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராபர்ட் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் கண்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து முறையான ஊதியம்
வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதற்கட்டமாக அனைத்து ஆசிரியர்கள் ஒன்றுபட்டு கோட்டை நோக்கி பேரணியும், அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டமும், சென்னை யில் மறியல் போராட்டமும் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. -நன்றி தினகரன் 12-01-2015