PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன. பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...