சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து முதியோர் உதவித்தொகை பயனாளிகளும் ஆதார் எண் பெறும் பணிகளை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டிருந்தது. இதனால் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் ஆதார் எண் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
ஆதார் அட்டைக்காக இதுவரை பதிவு செய்யாத பயனாளிகள் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்தில் சிறப்பு செயலாக்க திட்ட துணை தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று தங்களது விவரங்களை 28ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் பதிவு செய்யாதவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.