பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5) முதல் தொடங்க உள்ளது.

பிப்ரவரி இறுதிவரை நடைபெறும் இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட
பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 2,300 தேர்வு மையங்களில் சுமார் 8.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

இவர்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...