வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...