கலையாசிரியர் போட்டித் தேர்வுக்குரிய பாடத்திட்டம்: இணையதளத்தில் வெளியீடு

கலையாசிரியர்கள் பணி நியமன போட்டித் தேர்வுக்குரிய பாடத்திட்டம், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து, மேம்படுத்தும் நோக்கில் ஓவியம், இசை, தையல், விவசாயம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த ஆசிரியர்கள், கடந்த ஆண்டுகளில் , வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். முழுநேர கலையாசிரியர்கள், 2011க்கு பிறகு இதுவரை, நியமனம் செய்யப்படவில்லை. இனிவரும் காலங்களில், சக ஆசிரியர்கள் போன்று,
போட்டித் தேர்வுகளின் மூலமே கலையாசிரியர்களும் பணிநியமனம் செய்யப்படுவர் என, 2014 நவம்பர் 17 ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை திரும்பபெற்று, முன்பு போலவே கலையாசிரியர்கள் மாநில வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவேண்டும் என போராட்டங்கள் நடந்து வரும் இந்நேரத்தில், இத்தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், போட்டித்தேர்வுகளின் மூலமே, பணிநியமனம் என்பதை அரசு உறுதிசெய்துள்ளது. தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், "போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என்ற தனித்தனி பிரிவுகளில் பாடத்திட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில், மாநில பதிவு மூப்பில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் சலுகை அல்லது தனி மதிப்பெண் முறையை கொண்டுவர வேண்டும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...