ரயில்வே பட்ஜெட் வரலாற்றில், முதல் முறையாக, குறிப்பிட்ட வழித்தடங்களில் புதிய ரயில்கள் அல்லது கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லாமல், நேற்று பார்லிமென்டில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, 'பட்ஜெட்டில் அறிவிக்கும் அளவிற்கு, புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்புகள், முக்கியமான
விஷயங்கள் அல்ல; சாதாரண நிர்வாக ரீதியான விஷயம் தான்; அவற்றை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்' என்று கூறி, ரயில்வே பட்ஜெட்டின் வித்தியாசமான அணுகுமுறையை உறுதி செய்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், என்னென்ன மூலதன முதலீடுகள் தேவை, அவை எவ்வாறு செய்யப்படும் என்பதே, ரயில்வே பட்ஜெட்டின் மூலக் கருத்தாக இருந்தது. பல ஆண்டுகளாக, தேவையான அளவிற்கு புதிய முதலீடுகளை காணாத ரயில்வே துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 8.56 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும், அதில், 2015 - 16ம் நிதி ஆண்டில் மட்டும், ஏறத்தாழ, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும், பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் அனைத்தும், புதிய வழித்தடங்கள் அமைத்தல், வழித்தடங்களின் போக்குவரத்துத் திறனை அதிகரித்தல், மின்மயமாக்கல், பாதுகாப்பை அதிகரித்தல் ஆகிய முக்கிய தேவைகளுக்கு செலவிடப்படும். இதன்மூலம், இந்த ஆண்டு மட்டும், 9,400 கி.மீ., வழித்தடங்கள் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.