தாலுகா அலுவலகங்களில், 'இ-சேவை' மையம் துவக்கம்! இனி, சான்றிதழுக்காக அலைய தேவையில்லை

கோவை மாவட்டத்தில்,10 தாலுகா அலுவலகங்களில், சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்கும், 'பொது இ - சேவை' மையம் தொடங்கப்பட்டுள்ளது.

வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ் பெற விரும்புவோர், வருவாய்த்துறையின் வெவ்வேறு
அலுவலகங்களுக்கு, நாட்கணக்கில் அலையும் நிலை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 'இ-சேவை' மையங்களை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மையங்களில், வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டம், கலப்பு திருமண சான்று, விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமண நிதி உதவி திட்டம், ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டங்களுக்கான சான்றுகளை எளிதில் பெற முடியும்.

சான்று பெற விரும்புவோர், ஒரிஜினல் ஆவணங்களுடன், சேவை மையம் வந்தால், அங்குள்ள பணியாளர்கள் சான்றிதழ்களை 'ஸ்கேனிங்'செய்து, விண்ணப்பத்தை கம்ப்யூட்டரில் நிரப்பி, பிரின்ட் செய்யப்பட்ட டோக்கன் வழங்குவர். சான்றிதழில் எந்தெந்த அதிகாரியின் கையொப்பம் பெற வேண்டுமோ அவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் அனுப்பி, பரிந்துரை பெறப்படும். அதன்பின், மண்டல தாசில்தார் அல்லது தாசில்தார் கையெழுத்திட்ட சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு 'எஸ்.எம்.எஸ்' அனுப்பப்படும், விண்ணப்பதாரரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, சான்றிதழ் ஒப்படைக்கப்படும். இச்சேவைக்காக பணம் செலுத்த தேவையில்லை.

இதன் மூலம், வி.ஏ.ஓ., அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என சான்றிதழுக்காக, மக்கள் அலைவதும், கால் கடுக்க காத்திருப்பதும் தவிர்க்கப்படும். சேவை மையத்தில், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்; மின்கட்டணம், எல்.ஐ.சி., தவணை தொகை செலுத்தலாம். ஆதார் அட்டை பெறுவதற்கு ஒப்புகை சீட்டு இருந்தால், அதனை பயன்படுத்தி ஆதார் அட்டை பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'பொது இ - சேவை' மையத்தை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, பேரூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், சூலுார், அன்னுார், பொள்ள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய, 10 தாலுகாக்களில் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...