கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் கல்விச் சுற்றுலா செல்லும் முன்பாக மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் உரிய முன் அனுமதியைக் கண்டிப்பாகப் பெற வேண்டும்.
இத்தகைய அனுமதி பெற்ற பிறகே கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
சுற்றுலா அழைத்துச் செல்லும்போது நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி அவசியம். பெற்றோரின் அனுமதி பெறும்போது அவர்களின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலைப் பெற வேண்டும். பாதுகாப்பில்லாத சுற்றுலாவில் குழந்தைகளுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த நிகழ்வு அந்தப் பள்ளியை மட்டுமின்றி, கல்வித் துறையையே பாதிக்கிறது.
எனவே, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Email ThisSSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...