புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர் அனுமதி !

பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்;எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல்
தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது. * கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, 'லாகரிதம்' அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, 'கிராப் ஷீட்' போன்றவை தேர்வறையில் வழங்கப்படும். * புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், 'புரோகிராம்' செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டு வர அனுமதிக்கப்படும். இது போன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...