சமூக ஊடகங்களில் விஜயகாந்த் குறித்து அவதூறு: சென்னை காவல் ஆணையரகத்தில் தேமுதிக புகார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தேமுதிகவினர் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.

தேமுதிக பொருளாளர் இளங்கோவன், கொள்கைப் பரப்புச் செயலர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., வழக்குரைஞர் அணிச் செயலர் எம்.ஆர். பன்னீர்செல்வம், துணைச் செயலர்
வி.டி.பாலாஜி ஆகியோர் தேமுதிக நிர்வாகிகளுடன் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தனர். அங்கு குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனு விவரம்:

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தும், அவர் மனம் புண்படும் வகையிலும் உண்மைக்குப் புறம்பான கேலிச் சித்திரங்கள், அவதூறு துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை சமூக ஊடகங்களான முகநூல் (பேஸ்புக்), "வாட்ஸ்அப்', சுட்டுரை (டுவிட்டர்), "டெலிகிராம்' ஆகியவற்றில் பரவி வருகிறது.

இவை உள்நோக்கத்துடனும், அவரது புகழை சீர்குலைக்கும் எண்ணத்துடனும் குறிப்பிட்ட ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகின்றன. முக்கியமாக மேட்டுப்பாளையம் அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.கே. சந்தானம், அதிமுக நிர்வாகி குடந்தை முத்து ஆகியோர் இந்த வேலையை செய்து வருகின்றனர்.

இதில், சந்தானம் மீது, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உடனடியாக நீக்க வேண்டும்: கேலிச் சித்திரங்கள், அவதூறு துணுக்குகளால் விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் ஆகியோர் பெரிதும் மனம் புண்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிர புத்தியுடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சிப்பதை எந்த

வகையிலும் ஏற்க முடியாது.

மேலும், இப்போது முகநூல், வாட்ஸ்அப், சுட்டுரை, டெலிகிராம் ஆகியவற்றில் உள்ள தரக்குறைவான படங்கள், துணுக்குகள், கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை உடனடியாக காவல் துறையினர் நீக்க வேண்டும். மேலும், சமூக ஊடகங்களில் விஜயகாந்த் குறித்து கேலிச் சித்திரங்கள், படங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சந்திக்க மறுப்பு?



சென்னை பெருநகரக் காவல் ஆணையர் மனுவை பெறுவதற்கு அனுமதி மறுத்ததற்கு தேமுதிகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்த விவரம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரபப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுப்பதற்காக, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலத்தில் தேமுதிகவினர் வியாழக்கிழமை காலை குவிந்தனர்.

ஆணையர் அலுவலகத்தின் வாயிலில் காவலில் இருந்த போலீஸார் அவர்களில் முக்கியமான 10 பேரை மட்டுமே, ஆணையர் அலுவலக கட்டடத்துக்குள் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியே நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளமுள்ளு ஏற்பட்டது.

வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்த தேமுதிகவினரையும் அங்கிருந்து வெளியே செல்லும்படி சில போலீஸார் கூறினர். இதனால் போலீஸாருக்கும், தேமுதிகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் தேமுதிகவினர் வளாகத்துக்குள் நிற்பதற்கு போலீஸார் அனுமதி அளித்தனர்.

அதேநேரத்தில், ஆணையர் அலுவலக கட்டடத்துக்குள் சென்ற தேமுதிக நிர்வாகிகள், ஆணையர் எஸ். ஜார்ஜை சந்திக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், ஆணையர் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால், அவரைச் சந்திக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர். இதனால், தேமுதிகவினர் வேறுவழியின்றி, துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் மனுவைக் கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன், சந்திரகுமார் ஆகியோர் தேமுதிக நிர்வாகிகளை ஆணையர் சந்திக்க மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...