அரசு தேர்வுத்துறை ஊழல்: எஃப்.ஐ.ஆரில் ம.பி., கவர்னர் பெயர்

மத்திய பிரதேசத்தில் அரசு தேர்வுத்துறையில் ஊழல் செய்ததாக 70 அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவ்வின் பெயரும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராம் நரேஷ் யாதவ், 2011ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச கவர்னராக இருந்து வருகிறார். இவர் வனத்துறை காவலர்களுக்கு பணி நியமனம வழங்குவதற்கு 2013ம் ஆண்டு லஞ்சம் வாங்கியதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தவிர மேலும் 70 அரசு அதிகாரிகளின் பெயர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. ராம் நரேஷின் மகன் சைலேஷ் யாதவிற்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கில் கவர்னரின் மகனுக்கு பங்கு இருப்பதால், அதற்கு பொறுப்பேற்று கவர்னர் ராம் நரேஷ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதலில் போர்க் கொடி தூக்கியது. இதன் காரணமாகவே கடந்த வாரம் துவங்கிய மத்திய பிரதேச சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கவர்னர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. மேலும், ராம் நரேசால் கவர்னர் பதவிக்கே அவமானம் கூறி முழக்கமிட்டு, கவர்னர் உரையை தொடர விடாமல் செய்தனர். இதனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தற்போது இவ்வழக்கில் விசாரணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கவர்னரே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், மருத்துவ அதிகாரிகள், போலீஸ் காவலர்கள், ஆசிரியர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்ட மத்திய பிரதேச அரசுத்துறை பதவிகளில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிகளுக்கு தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக்கு வராமலேயே அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி, பதவி நியமனம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கவர்னர் தவிர, முன்னாள் தொழில்கல்வி அமைச்சர் லக்ஷ்மி காந்த் சர்மா உள்ளிட்ட 4 அதிகாரிகளின் பெயர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மாஜி அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...