டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெற்றுள்ள அமோக வெற்றி, பா.ஜ.,வை மட்டுமல்ல பெரும்பாலான மாநில கட்சிகளையும் மிரள வைத்துள்ளது. மிகப் பெரிய தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்.,க்கு ஆம்ஆத்மி கொடுத்துள்ள பலத்த அடி, பலம் வாய்ந்ததாக கருதப்படும் மாநில கட்சிகளுக்கு சட்டசபை தேர்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஆத்மியின் வெற்றி :
2013ம் ஆண்டு டில்லி சட்டசபை
தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஆம்ஆத்மி, 2015 சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அறுதி பெரும்பான்மையுடன் டில்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி, மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக உருவெடுத்துள்ளது. 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தது போன்ற தவறுகளை ஆம்ஆத்மி செய்திருந்த போதும், டில்லி மக்கள் ஆம்ஆத்மி மீது நம்பிக்கை வைத்து மீண்டுமொரு வாய்ப்பை அளித்துள்ளனர். ஆம்ஆத்மியின் இந்த பிரம்மாண்ட வெற்றி, பாரம்பரிய கட்சி என பெயரெடுத்துள்ள காங்., மற்றும் பா.ஜ.,விற்கு மாற்றான ஒரு கட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தலைநகர மக்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஆம்ஆத்மியின் அடுத்த இலக்கு :
டில்லியில் பெற்ற வெற்றியின் ஊக்கத்துடன் அடுத்ததாக பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மிக்கு 4 இடங்கள் கிடைத்தன. உ.பி., மேற்குவங்கம், பீகார், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநிலங்களிலும் ஆம்ஆத்மி தங்களின் பலத்தை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. டில்லியைப் போன்று இல்லாவிட்டாலும் பிற மாநிலங்களில் உள்ள சவால்களை தங்களின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக எடுத்து மக்களை கவரவும் ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளது. டில்லியில் கிடைத்த வெற்றி, நாட்டு மக்களின் கவனத்தை ஆம்ஆத்மி பக்கம் திருப்பி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் ஆம்ஆத்மி திட்டசிட்டுள்ளது.
மாநில கட்சிகள் கலக்கம் :
லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து நடந்த அருணாச்சல பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, காஷ்மீர் போன்ற மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வந்தது. பா.ஜ.,வின் இந்த தொடர் வெற்றிக்கு டில்லி தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது, மோடி அரசுக்கு எதிரான கட்சிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், தங்கள் மாநில சட்டசபை தேர்தல் குறித்த பயத்தையும் உருவாக்கி உள்ளது. குறிப்பாக மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் போன்றோருக்கு ஆம்ஆத்மி உடன் மோதல் ஏதும் இல்லாவிட்டாலும், தங்களின் மாநிலத்தில் ஆம்ஆத்மி போட்டியிட்டால் அது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற நிலையில் உள்ளனர்.
மாநில அரசியல் நிலை :
உ.பி.,யில் ஆளுங்கட்சியான சமாஜ்வாதியில் முலாயம் சிங் பழமைவாதி என்றாலும், அகிலேஷ் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கட்சிக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் அரசியல் செய்து வரும் மாயாவதி ஏற்கனவே டில்லி தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளார். இதனால் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு அவரது கட்சி வந்துள்ளது. மம்தாவை பொறுத்தவரை, சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் அவரது கட்சியினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் மக்களிடம் நம்பிக்கை இழந்து வருகிறார். பீகாரில், நிதிஷ்குமாருக்கும் மன்ஜிக்கும் யார் முதல்வர் ஆவது என்ற போராட்டம் நடந்து வருகிறது. லாலு மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு திராவிட கட்சிகளும் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்து வருவதால் இதனை பயன்படுத்தி பா.ஜ., ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆம்ஆத்மி மீதான மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதே போன்று பஞ்சாப், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றே கூறலாம்.