வாகனங்களில் உயர்பாதுகாப்பு பதிவு எண் பலகையை போலியாக பொருத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களுக்கான ஐஎன்டி என்ற குறியீடு கொண்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை (ஹை செக்கியூரிட்டி
ரெஜிஸ்டிரேஷன் நெம்பர் பிளேட்) என்ற பிளேட் முறை, தமிழகத்தில் இதுவரை அறிமுகப்படுத்தப் படவில்லை. இந்த உயர்பாதுகாப்பு பதிவு எண் பலகை திட்டத்தின் படி " ஐஎன்டி' என்ற குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளை (டியூப்ளிகேட்) வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். உயர் பதுகாப்பு பதிவு எண் பலகை திட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு முன், இந்த முறையில் போலி நம்பர் பிளேட் டுகளை (டியூப்ளிகேட்) தயாரிப்பதும், அதனை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். மேலும், இது போன்ற போலியான நம்பர் பிளேட்டுகளை (டியூப்ளிகேட்) வாகனங்களில் பொருத்த வேண்டாம் எனவும், மீறி வாகனங்களில் போலியான நம்பர் பிளேட்டுகளை பொருத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டப்பிரிவுகள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படாத "ஐஎன்டி' நம்பர் பிளேட் செய் வதோ, ஸ்டிக்கர் செய்வதோ, ஹாலோ கிராம் அல்லது அதுபோன்ற ஸ்டிக்கர் செய்வது, 464 சட்டப்பிரிவின் படி குற்றமாகிறது. இதனை விற்பனை செய்வது 468, 420 சட்டப்பிரிவின் படி குற்றமாகிறது என எஸ்.பி., விக்கிரமன் தெரிவித்துள்ளார்