பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கழகம், மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகிய 4 சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில்
மறியல் போராட்டம் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் அலுவலகம் உள்ள 10 மாடி கட்டிடம் முன்பு நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த போராட்டம் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் பேராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது ஆனார்கள். கைதான அனைவரும் நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர.