சேலம் மாணவி தமிழகத்தில் முதலிடம் !

ஐ.எஃப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி தேர்வில், சேலம் மாணவி பிரீத்தா, அகில இந்திய அளவில், எட்டாமிடத்தையும், தமிழக அளவில், முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், இந்திய வனப்பணிக்கான (ஐ.எஃப்.எஸ்.,) முதல்நிலைத்தேர்வு, கடந்த ஆண்டு,
ஆகஸ்ட் மாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் முதன்மை தேர்வும், 2015 ஃபிப்ரவரியில், நேர்காணலும் நடந்தது. இந்நிலையில், இந்திய வனப்பணிக்கான இறுதி தேர்வு முடிவு, பிப்.,18ம் தேதி வெளியானது. இதில், அகில இந்திய அளவில், 85 பேரும், தமிழக அளவில், 15 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். அவற்றில், சேலத்தைச் சேர்ந்த பிரீத்தா, இந்திய அளவில், எட்டாமிடத்தையும், தமிழக அளவில், முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சேலம், அழகாபுரம், பி.என்.டி. காலனி, அழகு விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரீத்தா. இவரது தந்தை முருகேசன், ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில், உதவி பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார். தாய் நர்மதா, சேலம் மாவட்டம், ஓமலூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.
பிரீத்தாவின் சகோதரர் ரேவந்த், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், சிவில் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
வனப்பணி தேர்வில் சாதனை படைத்தது குறித்து பிரீத்தா கூறியதாவது:
நான், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரியில், பி.டெக்.,(ஐ.டி.) படித்தேன். 2012ல், படிப்பை முடித்ததும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்தேன். சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெற்றேன். 2013ல் நடந்த சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். முதன்மை தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, இரண்டாவது முறையாக முயற்சித்து, இந்திய அளவில், எட்டாமிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். அதேபோல், படிக்கும்போது கவனம் சிதற கூடாது. மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும். இந்திய வனப்பணியில், துடிப்புடனும், நேர்மையாகவும் திறம்பட பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2013ம் ஆண்டு நடந்த, ஐ.எஃப்.எஸ்., தேர்வில், தமிழக அளவில், 22 பேர் வெற்றி பெற்றனர். 2014ம் ஆண்டில், 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக நடந்த, இந்திய வனப்பணி தேர்வில், தமிழக மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...