எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
கமுதி கே.என். பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ., -பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,-எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர்,'பி.எட்.,முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம்
வழங்கக்கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.
தனி நீதிபதி, 'மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள்,'ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என 2014 செப்.,18ல் உத்தரவிட்டனர்.
பாலசவுந்தரி,' ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டி நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் பழனியாண்டிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. மனுதாரர் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார்SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...